Thursday, February 5, 2015

காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு


காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு
டெல்லியில் ஆசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24.
9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை.
பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது.
15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது.
இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது.
எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.
காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது.
லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார்.
ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.
உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி.
இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன...


சிறந்த பெற்றோர்கள்



பிள்ளைகளுக்கு
கஷ்டங்களே தெரியாமல்
வளர்ப்பவர்கள்....
"நல்ல பெற்றோர்கள்"...
பிள்ளைகளுக்கு
கஷ்டங்களை சந்திக்க விட்டு,
எதிர்கொள்ள துணை நிற்பவர்கள்...
..."சிறந்த பெற்றோர்கள்"..

சிந்தனை துளிகள்..


* தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது, இவை நிம்மதியளிக்கும். 

* துன்பத்தையோ, தோல்வியையோ ஒரு போதும் கண்டிராத மனிதனை நம்பாதே. அவனை பின்பற்றாதே. அவன் கொடியின் கீழ் போரிடாதே.

* புகை நுழையாத இடத்தில் கூட வறுமை நுழைந்துவிடும். வறுமை வந்தால் உடல், உள்ளம் பலகீனமடையும். பிறர் வெறுப்பார்கள். நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது. எனவே வறுமைக்கு இடம் கொடுக்கக் கூடாது.

* விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

* நோய், நெருப்பு, பகை, கடன் இவற்றை மிச்சம் வைக்கக் கூடாது. சமயம் பார்த்து இவை நம்மை அழித்து விடும்.

* இளமையில் கல்வி கற்காமலும், பொருள் சேர்க்காமலும் இருந்தால் முதுமையில் கஷ்டப்பட நேரிடும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.

* உயர்ந்த சிந்தனையில் இருந்துதான் உயர்ந்த எண்ணம் உருவாகும்.

* உயர்ந்த எண்ணத்தில் தான் வாழ்வு சிறப்பாக அமையும்.

* யாரையும் எதுவும் கேட்காமலிருப்பது கௌரவம். நம் வருவாயில் வாழ்வது கௌரவம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கௌரவம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவது கௌரவம்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.

* பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது.

* ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன், தயவுதான் நண்பன், அடக்கம்தான் மனைவி, பொறுமைதான் மகன். இவர்களே உறவினர்கள்.

* வீரனைப் போரிலும், நண்பனைக் கஷ்ட காலத்திலும், மனைவியை வறுமையிலும், யோக்கியனைக் கடனிலும் அறிந்து கொள்ளலாம்.

* பெருந்துன்பமும், பெருங்கவலையும் உற்ற காலத்திலும் ஒரு பெண் தன் ஆலோசனையால் கணவனின் உயிர் காப்பாள்.

காதலிக்கு முத்தம் கோஹ்லிக்கு கபில் ஆதரவு

புது டெல்லி: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடி சதம் அடிக்கும்பட்சத்தில், கேலரியில் இருக்கும் தனது  தோழியை நோக்கி அவர் முத்தத்தை பறக்கவிடுவதை பொருட்படுத்த தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கபில் தேவ் நேற்று  கூறியதாவது: 2011 உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் பலர் இன்றைய அணியில் இல்லை. உலக கோப்பை அனுபவம் இல்லாவிட்டாலும்,  இறுதி வரை போராடக் கூடிய துணிச்சலான வீரர்கள் உள்ளனர். இந்திய அணி நிச்சயமாக அரை இறுதிக்கு முன்னேறும். 

அரை இறுதியில் விளையாடும் நான்கு அணிகளுக்குமே தலா 25 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே கோப்பை யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.
போட்டிகளின்போது விராத் கோஹ்லி தனது தோழிக்கு முத்தத்தை பறக்கவிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் சிறப்பாக விளையாடி சதம்  விளாசும்போது அப்படி நடந்துகொள்வதை பொருட்படுத்த தேவையில்லை. டக் அவுட் ஆகிவிட்டு பிளையிங் கிஸ் கொடுத்தால் தான் தவறு.  இன்றைய கிரிக்கெட் வெகுவாக மாறிவிட்டது. இவ்வாறு கபில் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு 2வது ரேங்க்

உலக கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி 2வது ரேங்க்குடன் களமிறங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் நேற்று வெளியிட்ட  ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியா 120 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா 114  புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. 

*அனுபவம் வாய்ந்த டோனி கேப்டனாக இருப்பது உலக கோப்பையில் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணி  முன்னாள் நட்சத்திரங்கள் இன்சமாம் உல் ஹக், சோயிப் அக்தர் இருவரும் கூறியுள்ளனர்.
* உலக கோப்பை ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணியுடன் நடக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏதுமில்லை என்று அந்த அணி  வீரர்கள் நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என்று ஆஸி. வேகம் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
* ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் விளையாட தான் தயாராக இருப்பதாக காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க்  தெரிவித்துள்ளார்.
* உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமாக இருப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்  முகமது இர்பான் கூறியுள்ளார். இவர் 7 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*காயத்தால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் உலக கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என  அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சோதனையில் அவர் தனது உடல்தகுதியை நிரூபிக்கத் தவறினார். மாற்று வீரர் பற்றிய அறிவிப்பு  விரைவில் வெளியாக உள்ளது. -  Source:  http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=130065

'என்னை அறிந்தால்' வரவேற்பு: கண்ணீரில் நெகிழ்ந்த அருண் விஜய்